தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா : வெளியான விபரம்!

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை திரைத்துறைக்கு கொடுத்து இளைஞர்கள் மத்தியில் இயக்குனர் வரிசையில் லோகேஷ் கனகராஜ் அதிகம் பேசப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில் உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியதில் அந்தப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியானதில் ரசிகர்களிடத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இரண்டு வாரத்திற்கு முதல் கர்நாடகா திரைப்படமான கே.ஜி.எப் பாகம் இரண்டு வெளியாகி இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் சிலர் இந்த மாதிரி கதை மற்றும் சண்டைக்காட்சி உடைய படங்களை தமிழ் இயக்ககுனர்களால் எடுக்கமுடியாதென கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தின் மூலம் சத்தமில்லாமல் பதிளடி கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து தளபதியை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகின்றார் இந்த படமானது விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தினை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜுக்கு பேசப்பட்ட சம்பளப்பணம் தொடர்பில் தகவல் வெளியாளது. அந்த வயைில் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleயாழில் பெண் தாதிக்கு ஆண் தாதியரால் தொலைபேசி ஊடாக வந்த கொலை மிரட்டல்!
Next articleஇயக்குநர் சிவாவுடன் கைக்கோர்க்கும் நடிகர் சூர்யா : வெளியான தகவல்!