யாழில் பொலிஸாரை சாட்டி தப்பிக்க முயன்ற திருடன் : பின்னர் நடந்த சம்பவம்!

வீடொன்றில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட முயன்ற திருடன் தன்னை பொலிஸ் துரத்தி வருவதால் வீட்டில் உள்ளே நுளைந்தேன் என பொய்கூறி உரிடைமயாளர்களின் கூச்சல் சத்தத்தால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான்.

இச்சம்பவமானது யாழ் அராலி வடக்கு செட்டியார் மடம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இரண்டரை மாதம் முன் பிரான்ஸ் தம்பதியினர்கள் நாடு திரும்பி அவர்களின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் அவர்கள் கோவிலுக்கு சென்ற வேலையில் திருடன் ஒருவர் அவரது வீட்டில் நுழைந்துள்ளார்.

வீடு திரும்பிய தம்பதியினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்த்ததில் திருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் தம்பதியினர் திருடன் என கூச்சலிட்டபோது நான் திருடன் இல்லை பொலிஸார் துரத்தி வந்ததில் உள்ளே நுழைந்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தம்தியனர் கூச்சலிட்டதால் மதிலில் பாய்ந்து தப்ப முயன்ற போது அக்கம்பக்கத்தினர் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்தினர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த இளைஞர் அளவெட்டி தெற்கு, அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவன் என்றும் கொலை சம்பவம் ஒன்றில் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளவன் என்றும் தெரியவந்துள்ளது.

திருடனை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த வீட்டில் பொருட்கள் எவையும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.