யாழில் துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய வாகனம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞர்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ் – நுணாவில் பகுதியில் நேற்று முனதினம் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் நுணாவில் நோக்கி A9 வீதி ஊடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர்களை அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதித்தள்ளியது.

இதில் மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 26 வயதான க. நிசாந்தன் என்பவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

அவருடன் பயணித்த மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான தி.பார்த்தீபன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்தான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Previous articleயாழில் 52 சிலிண்டர்களை திருடிய கும்பல் : பொலிஸார் மடக்கிப்பிடிப்பு!
Next articleயாழில் 06 பேருக்கு கொராணா தொற்று உறுதி : இருவர் மரணம்!