பிரபல கட்சி அலுவலகத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் : விசாரணைகள் தீவிரம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் பெண் ஒருரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இச்சம்பவமானது இன்று கேகாலை, களுகல்ல மாவத்தையிலுள்ள
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் 38 வயதான சகுந்தலா வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா எனும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Previous articleயாழ் சாவகச்சேரி நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர்களால் பரபரப்பு!! ஒருவர் கைது!! மற்றவர் தலைமறைவு!!
Next article2 வருடங்களின் பின் வெளியான கோப்ரா திரைப்பட விமர்சனம்!