யாழ் . பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை : வெளியான அறிவிப்பு!

யாழ் மாவட்ட சித்த மருத்துவமனை தற்போது அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் நந்தவனம் பாடசாலை (மக்கோனா) அருகில் இடம்பெற்று வருகின்றது.
“இங்கு இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம்”
பொதுவான நோய்களுக்கான வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு (OPD)


சிறந்த மருத்துவர்களினால் மருத்துவ சேவை இடம்பெற்று வருகின்றது
வெளிநோயாளர்களை மருத்துவர்கள் பார்வையிடும் நேரம் –
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிமுதல் பிற்பகல் 4மணி வரையும் ,சனிக்கிழமை காலை 8மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் ஞாயிறு காலை 8மணி முதல் நண்பகல் 12 மணிவரை மற்றும் அரச விடுமுறை தினங்களில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இலவச மருத்துவ சேவை இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் கடந்த 01.09.2022 திகதியிலிருந்து தங்கி நின்று கிசிச்சை பெறும் உள்ளக நோயாளர் விடுதி(WARD) நோயாளர்களுகளின் நலன் கருதி சகல வசதிகளுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவமனையில் இடம்பெறும் சிகிச்சைகள்


1.வதரோகம்.
2.சிறுவர் நோய்கள்.
3.தோல் நோய்கள்.
4.சுவாச நோய்கள்.
5.பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும்.
6.சலரோகம்.
7.குருதி அமுக்கம்.
8.உடற்பருமன்.
9.குறிப்பாக தொற்று நோய்கள், தொற்ற நோய்கள் என பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள்
(காய்ச்சல், தடிமன். சளி,தும்பல் (பீனிசம்),தலைமுடி உதிர்தல், முகப்பருக்கள்)
10.அக்குபஞ்சர் சிகிச்சை முறை.
11.வர்ம சிகிச்சை.
12.பஞ்சகர்ம சிகிச்சை.
13.அட்டை விடுதல் .(வரிக்கோசு)
14.சுட்டி முறை சிகிச்சை (ஆணிக்கூடு அகற்றுதல்)
பாரம்பரிய வைத்திய முறையிலும் சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றது.


1.நெறிவு முறிவு சிகிச்சை முறை.
2.பழைய நோக்களுக்கு பத்துக்கட்டுதல்.
3.உளுக்கு, சுழுக்கு பார்த்தல்.
போன்ற பலதரப்பட்ட சிகிச்சை முறை திறம்பட பாரம்பரிய வைத்தியர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
உள்நாட்டு, வெளிநாட்டு நோயாளர்கள் கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறப்பு மருத்துவ சேவையும் இடம்பெறவுள்ளது.


வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏற்ற வகையில் நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தனி அறை,மலசல கூடம், உணவு, சிறந்த சூழலுடன் இசைந்த சிறப்பு மருத்துவ சேவையும் வழங்கப்படவுள்ளது.
இச்சேவையினை பெற விரும்புகின்ற நோயாளர்கள் முற்பதிவினை சித்த வைத்தியசாலையில் பதிவு செய்து கொள்ள முடியும் .
தொடர்புகொள்ள வேண்டிய
தொலைபேசி இலக்கம் -0773782739,0212212809
மாவட்ட சித்த வைத்தியசாலையில் முழுச்சேவையும் சீராக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
மக்கள் அனைவரும் பங்கு பற்றி பயன் பெறவும்.
மருத்துவ அத்தியட்சகர் ,
மாவட்ட சித்த வைத்திய சாலை
அச்சுவேலி.