யாழில் அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் இளைஞன் பலி!

யாழில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று (24-09-2022) அதிகாலை உயிரிழந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெராயின் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

மேலும், மருத்துவப் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு ஹெராயின் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் கூலிக்கு ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் ஹெரோயின் போதைக்கு அடிமையாகி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமுல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன் : வெளியான காரணம் !
Next articleயாழில் போதைப்பொருளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாடசாலை மாணவர்கள் கைது !