யாழில் வீடு ஒன்றின் மீது பெட்றோல் குண்டு வீச்சு : விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டை வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினால் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் குண்டுகளை வீசியது மட்டுமின்றி, வீட்டில் இருந்த பொருட்களையும் தீ வைத்து எரித்தனர்.

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.

இந்த சம்பவத்தால் ரூ.18 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Previous articleஎரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
Next articleஇலங்கையின் பிரபல பேக்கரி ஒன்றின் மோசமான செயல்!