எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தும் என ஐஓசி தெரிவித்துள்ளது .

இதுகுறித்து ஐஓசியின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா கூறியதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால், விலை குறைப்பு குறித்து மின்சக்தி அமைச்சர் பரிசீலிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எண்ணெய் விலை குறைப்பு தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலைகளைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று குப்தா கூறினார்.

விலை திருத்தம், ஏதேனும் இருந்தால், அக்டோபர் 1ம் தேதி அறிவிக்கப்படும்.கடந்த 30 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலையின் அடிப்படையில் விலை திருத்தம் மதிப்பீடு செய்யப்படும் என்றும், எனவே இந்த விலை குறைப்பு குறித்து அமைச்சர் முடிவு செய்வார் என்றும் அவர் விளக்கினார்.