திரிபோஷாவில் விஷத்தன்மை தொடர்பில் வெளியான விசாரணை அறிக்கை!

திரிபோஷாவின் நச்சுத்தன்மை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் என திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகள் கிடைக்கப்பெறும் என நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அந்த அறிக்கைகள் கிடைத்த பின்னர் திரிபோஷாவின் தரவரிசை அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உரிய குறியீட்டு முறைக்கு அமைய தயாரிக்கப்பட்ட திரிபோஷா சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட ரயிலில் கோளாறு!
Next articleயாழ் பிரபல மகளீர் கல்லுாரி மாணவி கஞ்சா அடிப்பவனுடன் பஸ்சுக்குள் காதல் லீலை!!