யாழில் புகையிரதத்தில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்த நபர்!

யாழில் புகையிரதத்தில் மோதி சம்பவ இடத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்திலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி : மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Next articleதென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தந்தை மற்றும் மகன் பலி : மூவர் கைது!