மன்னாரில் மண்ணெண்ணெய் 700 ரூபாய் – அதிர்ச்சியில் மக்கள்

இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்போதும் எரிபொருள் விநியோகத்தில் பல ஊழல்கள் உள்ளன. மன்னாரில் கடல்சார் தொழிலை நம்பி பலர் வாழ்கின்றனர்.

அரசின் அறிவிப்பின்படி, 350 ரூபாய்க்கு எண்ணெய் வழங்கப்பட்டாலும், மண்ணெண்ணெய் வெளியில் 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் மண்ணெண்ணெய் விற்பவர்களுக்கு எங்கிருந்து மண்ணெண்ணெய் கிடைத்தது.