மனைவியை நிர்வாணமாக சூட்கேசில் அடைத்த கொடூரன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கடந்த திங்கட்கிழமை அரியானாவின் குருகிராமில் உள்ள சௌக் ஒன்றில் சூட்கேஸ் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தபோது, ​​பெண்ணின் நிர்வாண உடல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 22 வயதான ராகுலுக்கும், அவரது 20 வயது மனைவி பிரியங்காவுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு வயதில் குழந்தை உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ராகுல், குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

ராகுலின் சம்பளம் அடிப்படை செலவுக்கே போதுமானதாக இருக்கும் நிலையில், செல்போன், டிவி, பிரிட்ஜ் வேண்டும் என மனைவி பிரியங்கா அடிக்கடி கணவரிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும், கோபத்தில் கணவரை பலமுறை அறைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு கணவர் ராகுல், மனைவி பிரியங்காவை அடித்துக் கொன்றார்.

ராகுல் தனது மனைவியின் உடலை வீட்டில் வைத்து குழந்தையுடன் இரவைக் கழித்தார். மறுநாள் கடைக்குச் சென்று ஒரு பெரிய சூட்கேஸ் வாங்கினான். பின்னர் மனைவியை நிர்வாணமாக்கி உடலை சூட்கேஸில் வைத்துள்ளார்.

மேலும், மனைவியின் கையில் கணவர் ராகுல் பெயரை பச்சை குத்தியதால், அந்த பகுதியில் உள்ள சதையை கத்தியால் அகற்றியுள்ளனர். பின்னர் ஆட்டோவில் ஏறி சூட்கேசை சத்தமில்லாமல் காலி இடத்தில் வைத்துவிட்டு சென்றார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous articleயாழில் கைதான இளைஞர் : வெளியான காரணம்!
Next article100 மேற்பட்ட குழந்தைகளின் உயிரை வாங்கிய Syrup இலங்கையில் உள்ளதா?