யாழில் வீதியில் சென்ற நபர் ஒருவரிடம் வாளை காட்டி வழிமறித்து அச்சுறுத்தி கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள்!

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை வழிமறித்து முகமூடி அணிந்து மற்றும் வாளினை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் உடமையில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ். அச்சுவேலி – ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் பயணித்த ஒருவரை வாள்கள் மற்றும் கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி 15000 ரூபாய் வரையிலான பணம் உள்ளிட்ட ஆவணங்களைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ரூபாய்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லைவெளி உட்பட பல்வேறு பகுதிகளில் வீதி கொள்ளையில் ஈடுபடும் கும்பல்களின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.