கிளிநொச்சியில் ஆமணங்கு விதையை உண்ட மாணவர்கள் : வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 4 சிறுவர்களும் 3 சிறுமிகளும் ஆமணக்கு விதை உட்கொண்டதால் ஒவ்வாமை காரணமாக கடந்த 12ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருந்தாலும் ஆமணக்கு விதைகளை உண்ணும் நிலை இல்லை.

கந்தபுரம் விநாயகவுடூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது காணியில் இருந்த ஆமணக்கு விதையை வகுப்பறைக்கு கொண்டு வந்த நிலையில், அதனை உடைத்து உள்ளே இருந்த விதையை விளையாட்டாக சாப்பிட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் போது வாந்தி எடுத்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.