யாழில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த இளைஞனை கத்தியால் வெட்டிய குடும்பஸ்த்தர் !

வீடு திரும்பிய இளைஞனை கத்தியால் குத்திய குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ​​அவரை வழிமறித்த நபர் ஒருவர் அவரை வெட்டியுள்ளார்.

காயமடைந்த இளைஞனை பொதுமக்கள் மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பளை முல்லையடியைச் சேர்ந்த பால்ரை துஷாந்தன் என்ற இளைஞன் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பளை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

எனினும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleவவுனியாவில் பயங்கர விபத்து சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleவவுனியாவில் திடீரென களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!