யாழில் நகைக்கடை ஒன்றில் சங்கிலி ஒன்றை திருடிக் கொண்டு வவுனியாவுக்கு தப்பியோட்டம்!

யாழில் நகைக்கடை ஒன்றில் சங்கிலி ஒன்றை நபர் ஒருவர் திருடிக் கொண்டு வவுனியாவுக்கு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்ற நபர் ஒருவர் அங்கு செயின் வாங்குவது போன்று நடித்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான செயினை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, நகைகள் திருடப்பட்டதை அறிந்த கடையின் உரிமையாளர் தனது உதவியாளரை அழைத்து திருடனைக் கண்டுபிடித்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், திருடப்பட்ட சங்கிலியுடன் வவுனியா நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸாரின் துரித நடவடிக்கையினாலும், நகைக்கடை உரிமையாளரின் நடவடிக்கையினாலும் திருடப்பட்ட ஒரு மணித்தியாலத்தில் திருடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ். ரயில் மோதி இளைஞனுக்கு நேர்ந்த துயரம் !
Next articleஇலங்கை ஜனனியின் வேறலெவல் டான்ஸ்…தமிழ் ஹீரோயின்களையும் அடித்து தூக்கிய அழகு! ட்ரெண்டாகும் வீடியோ !