யாழில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து : இருவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.தென்மராட்சி சாவகச்சோி பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleயாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம்! மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்னாம் சென்றடைந்தனர்.. !
Next articleயாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடாவை சேர்ந்த இருவர் கைது!