மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை !

எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது.

நடிகர் ஆர்கே தனது மனைவி ராஜி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் இங்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஆர்.கே வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்த கொள்ளையர்கள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மனைவி ராஜியை கட்டிப்போட்டு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஆர்.கே.வின் மனைவியை கூரிய ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, கையில் இருந்த செல்போனை பறித்து கொலைமிரட்டல் விடுத்து, கட்டி வைத்துவிட்டு நகை, பணம் எங்கே என்று கேட்டுள்ளனர்.

20 நிமிடத்தில் வீட்டில் இருந்த பணம், நகைகள் அனைத்தையும் திருடிச் சென்ற 3 கொள்ளையர்கள் வந்த வழியிலேயே சென்றுவிட்டனர். அதன்பிறகு வீட்டுக்கு வந்த ஆர்.கே., மனைவி ராஜி கட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஆர்.கே தரப்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆர்கே வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 200 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். கைரேகை என அனைத்தையும் ஆய்வு செய்த போலீசார் ஆர்.கே.வின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மேலும், வீட்டின் சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில், கொள்ளையர்களில் ஒருவன் நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும், வீட்டில் வேலைக்காரனாக இருந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளைக்கு அவர் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.