யாழில் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர் : போதைப்பொருளுடன் கைது!

யாழில் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதிகளில் கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்குறித்த பகுதிகளில் இருந்த வீட்டுகளில் இருந்து 16 இல்டசம் தங்க நகைகளை திருடியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் இருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் அதிகளவான நகைகளை அடகு கடைகளில் வைத்ததாகவும் பொலிஸாரின் விசாரணையின் தெரியவந்துள்ளது.

Previous articleமகளை மீட்டுத்தாருங்கள்; தாய் ஒருவரின் கண்ணீர் கோரிக்கை!
Next articleசட்டவிரோதமாக எல்லைத்தாண்டிய இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!