யாழில் பொலிஸார் நடத்திய சோதனயில் இருவர் கைது : வெளியான காரணம்!

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவர் பொலிஸார் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.இளவாலை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சந்தேக நபர்கள் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் 30 லீற்றர் கசிப்புடன் மற்றையவர் 10 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறார் காவல் துறையினர் செய்து வருகின்றனர்.

Previous articleயாழில் உள்ள வீதியொன்றில் உயிரிழந்த நிலையில் கிடந்த முதலை!
Next articleயாழ்.நகரில் உள்ள உணவகங்களில் 2வது தடவையாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை!