யாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது! எஸ்.பிரணவநாதன்

யாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முத ல் வ ர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (31) இரவு முதல் தாம் பதவியில் இருந்து விலக்குவதாக யாழ் மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், யாழ்.மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இனி மேயரை தெரிவு செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபையை கலைப்பது குறித்து தன்னால் முடிவெடுக்க முடியாது எனவும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கேட்கப்படும்.எனவும் .தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலும் இதே நிலை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், சட்டப் பேரவைத் தலைவரிடம் ஆலோசனை கோரிய போதும், இதுவரை எந்த பதிலும் இல்லை.’ என்றார்.

Previous articleபுதைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
Next articleமட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்த யுவதி ! காதலியின் உடலுக்கு தடுக்க தடுக்க தாலி கட்டிய காதலன் !