உடலில் இரத்தத்தை சுத்தமாக்க நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய தகவல்கள்

உடலில் இரத்தத்தை சுத்தமாக்க நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய தகவல்கள்

இரத்தம் மனித உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தம் தூய்மையற்றதாக மாறினால், அது உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. இது தொடர்ந்தால், அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். அதேபோல நம் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகவும், இரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கை சரியாகவும் இருந்தால்தான் உடல் நோயின்றி வாழ முடியும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். எனவே, இரத்தத்தை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்:

இரத்தம் அதிக திரவமாக இருக்க, முங்கைக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த திராட்சை, முளைத்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வர, இரத்தம் சுத்தமடைந்து பெருகும். புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.

இஞ்சியை நன்றாக அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகி இரத்த அணுக்கள் பெருகும்.

எலுமிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால் இரத்தம் சுத்தமாவதோடு, பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு, உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். மேலும் மஞ்சள் இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், முழு உடலையும் சுத்தப்படுத்துகிறது.

கடுக்காய் பொடி 5 கிராம் மற்றும் கிராம்பு பொடி 4 கிராம் ஆகியவற்றை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது நெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் 2-3 முறை கொடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது எப்போதாவது இப்படி செய்து வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்.