சகுந்தலம் பட நிகழ்ச்சி விழாவில் அனைவரின் முன்பும் கண்ணீர்விட்டு அழுத நடிகை சமந்தா- என்ன ஆனது !

தமிழ் சினிமா ரசிகர்களால் பல்லவரத்து பொண்ணு என்று கொண்டாடப்படும் நடிகை சமந்தா .

தொடக்கத்தில் ரூ. 500 வாங்கி மாடலிங் துறையில் பயணித்த சமந்தா, தற்போது தன் சொந்த முயற்சியாலும், உழைப்பாலும் தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார்.

சமந்தாவும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படத்திற்கு கமிட் ஆன நிலையில், உடல் நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கிய சமந்தா அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை.

தற்போது சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சகுந்தலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசுகையில், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என கூறிய சமந்தா, உடனே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

அப்போது நடிகை சமந்தா பேசுகையில், இந்த தருணத்துக்காக பல நாட்களாக காத்திருக்கிறேன். எதிர்பார்த்தபடி படம் வெளியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

ஆனால் சில நேரங்களில் மட்டும் சில மாயங்கள் நடக்கும். சாகுந்தலத்திலும் அப்படித்தான் நடந்தது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்றார்.

Previous article11 வயது பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டிய கணவன் மனைவி!
Next articleஇலங்கை பெண் ஜனனிக்கு அடித்த பேரதிஷ்டம் !