யாழில் கைதான இளைஞர் ! வெளியான காரணம் !

யாழில் வாள்கள் தம்வசம் வைத்திரு்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலாங்காடு சுன்னாகம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைசேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleபாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
Next articleஅமைச்சராக களமிறங்கவுள்ள ஜீவன் தொண்டமான்!