யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது

யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றதாக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (19.01.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீசாலையைச் சேர்ந்த 24 வயதான நபர் என தெரியவருகிறது.அத்துடன், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்வண்டி மற்றும் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.கைதான சந்தேகநபரை சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

Previous articleநாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்களிடம் புதிய வரி அறவிடப்படுகின்றதா?
Next articleவிரைவில் மேலும் சிலருக்கு அமைச்சு பதவிகள்