திருமணத்திற்காக போலியான விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற யுவதி கைது!

போலியான விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற யாழைச் சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சில் விசா இல்லாமல் இருக்கும் இளைஞனைத் திருமணம் செய்வதற்காக போலியான போலாந்து விசாவுடன் சென்ற சமயம் கைதாகியுள்ளார் யுவதியை போலாந்திற்கு வரவழைத்து அங்கிருந்து பிரான்சிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார் இளைஞர் குறித்த யுவதிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது!

மேலும் குறித்த யுவதியை போன்று போலி விசாவுடன் சென்ற மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை வாய்ப்பிற்காக போலி விசாவில் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது!

கைது செய்யப்பட்ட நபர்கள்  கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் ராஜகிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும்  21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது!

சட்டவிரோதமான முறையில் மனித கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்து வெளிநாடு செல்ல முயன்றுள்ளனர். அந்த வகையில் குறித்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபிரான்சில் ஆரம்பப் படசாலை ஒன்றிலிருந்து மாயமான மாணவர்கள்!
Next articleகுழந்தைகளின் பற்களின் வளர்ச்சியில் உண்டாகும் மாற்றங்கள்!