குழந்தைகளின் பற்களின் வளர்ச்சியில் உண்டாகும் மாற்றங்கள்!

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் நேரம் மிகவும் சுறு சுறுப்பாக காணப்படுவார்கள் அத்தோட அவர்களுக்கு காய்ச்சலும் ஏற்ப்படும்

தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே குழந்தைகளுக்கு 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவின் 14-வது வாரம் முடிவடையும் வேளை , ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலினுள்ளே தோன்றிவிடும்.

குழந்தை கருவில் இருக்கும் போதே தாயின் வயிற்றிலே தோன்றும் நிரந்தர பற்கள், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே வர ஆரம்பித்து விடுகின்றன.

பற்கள் வெளியாரும் போது குழந்தைகளின் வாயிலிருந்து உமிழ் நீர் வருவதும் அத்துடன் வாயை கடித்து கொள்வார்கள் அத்துடன் கையில் ஏதும் பொருட்கள் கிடைத்தால் அதனையும் வாயில் வைத்து கடித்துக் கொள்வார்கள்.

ஈறின் உள் பகுதியில் இருக்கும் எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி ஈறினைத் துளைத்துக் கொண்டு வெளியில் வருகின்றது நகம் முடி வளர்வது போன்று பற்கள் வருவதும் ஒரு கடினமான தொன்றாகும் பற்கள் நரம்பின் கிளை வேர்களை பிடித்துக் கொண்டு வளர்ச்சியடைகின்றன.

குழந்தை பருவத்தின் ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியிலும் குறைந்தது நான்கு பற்களாவது முளைக்கின்றன ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கே விரைவாக பற்கள் முளைக்கின்றன.