யாழில் இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை ! நேற்றிரவு இடம்பெற்ற கோர சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால்துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் இந்த கொடூர செயலை செய்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous article71 வயதில் 5000m ஓட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை செய்த முள்ளியவளை சாதனைப் பெண்மணி..!
Next articleநஷ்ட ஈட்டுடன் அரச பணியாளர்களை பணிநீக்க திட்டமிடும் அரசு!