இலந்தைப் பழத்தின் மருத்துவ குணங்கள்

இலந்தைப்பழம் காட்டுவகைப் பழம் நாட்டு வகைப் பழம் என இரண்டு வகைகளை கொண்டது சீமை இலந்தை என்ற வகை ஓர் இலந்தைபழமும் உள்ளது அது நாட்டு வகை இலந்தை பழத்தை போன்றதே இவ் அனைத்து பழங்களினதும் மருத்துவ குணங்கள் ஒன்றே

இது கல்சியம் குறைவாக இருப்பவர்களுக்கும் பற்கள் பலமில்லாமல் இருபவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதொன்றாகும் அத்துடன் இரவில் தூக்கம் வரமால் தவிப்பவர்களுக்கு நிறைவான தூக்கத்தையும் கொடுக்கும்.

உடலில் பித்த சமநிலையை பேண உதவும் அத்துடன் பசில்லா தன்மையை விரைவில் போக்கும் பெண்களுக்கு ஏற்ப்படும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்க்கும் உறுதுணையாக இருக்கின்றது மாதவிடாய் காலத்தில் ஏற்ப்படும் அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

அடிக்கடி உடலில் வலி ஏற்படுபவர்களுக்கு வலியை போக்கி உடலை தென்பாக வைத்திருக்க உதவுகின்றது அதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை தூய்மையாக்குகின்றது.

உடலில் குளிர்ச்சி கொண்டவர்கள் மதிய நேரத்தில் மட்டும் இதனை உட்க் கொள்ளலாம்.