யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர விபத்து ! ஒருவர் வைத்தியசாலையில் !

யாழ். சற்று நேரத்திற்கு முன் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இ.போ.ச .வுக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:

பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை வீதி பஸ் ஒன்று உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருதங்கேணி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்த இளைஞர்கள் ! நெகிழ்ச்சியான செயலால் குவியும் பாராட்டுக்கள் !
Next articleநாளை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!