பிக்பாஸ் ஜனனியா இது ? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 கடந்த வாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற போட்டியாளராக இலங்கையைச் சேர்ந்த ஜனனி என்ற போட்டியாளர் கொண்டாடப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் செல்லப்பிள்ளையாக தொடங்கிய ஜனனிக்கு நாளுக்கு நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்தும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினரிடமும் ஆதரவு பெருகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியதுடன், பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை பயணிப்பார் என பலரும் எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு ஆஃபர்கள் வர ஆரம்பித்தன. குறிப்பாக இளையதளபதி விஜய்யின் புதிய படத்திலும் ஜனனிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Previous articleவீதியில் ஆசிரியை மீது பாலியல் சேட்டை; உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் அதிரடிக் கைது!
Next article15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 வயது இளைஞன் கைது