இரவில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இதனால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது தெரியுமா?

பொதுவாக, இப்போதெல்லாம் செல்போனில் மூழ்கி விடுபவர்கள் அதிகம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி உள்ளனர்.

இப்போதும் சிலர் செல்போன் இல்லாமல் தூங்குவதில்லை. தூங்கும் போது கூட வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ஒரு ரவுண்ட் செய்துவிட்டுத்தான் தூங்கிவிடுகிறார்கள்.

தூங்காமல் செல்போன் பயன்படுத்துவதால் எத்தனை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தெரியுமா?

ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது.

செல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். இது உங்கள் பார்வையை மட்டுமல்ல, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது.

அதாவது நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System) இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.

அதுதான் பினியல் சுரப்பி, கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின் (melatonin) இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும். இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்.அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது.

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும். இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.

அதனால் முடிந்தவரை இரவு நேரங்களில் செல்போன்களை பாவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

Previous articleயாழ்ப்பாணம் சந்தி பகுதியில் இளைஞர்களை துரத்திச்சென்ற யானை ! மயிரிழையில் உயர்த்தப்பிய இளைஞர்கள் !
Next articleபுகையிரத விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி ஊடகவியலாளர் !