யாழில் கோரவிபத்தில் உயிரிழந்த இளைஞர் ! அவர்பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் !

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்தி வரும் வாள்வெட்டுக் குழுவான ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயாஸ் வாகனம் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி ஆவா குழுவின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாகச் சென்றதில் ஒன்று மருணர்மடம் நோக்கிப் பயணித்த யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஹேய்ஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த அனுஜன் (வயது 19) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபரான ஜெயசீலன் ரகுசன் (வயது 17) ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து வன்முறை கும்பல் ஒன்று முகநூலில் “சம்பவத்திற்கு சென்ற நண்பர்கள் சம்பவமாகிவிட்டனர்” என பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவருவதுடன், இதன் காரணமாக வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இதுதவிர, வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், வீதியில் செல்லும் அப்பாவி மக்களும் இவ்வாறானவர்களால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்தில் உயிரிழந்த இலங்கை விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
Next articleமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ! விசாரணைகள் தீவிரம் !