துருக்கி மற்றும் ரஷ்ய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

துருக்கி மற்றும் ரஷ்யாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பல ஆண்டுகளிற்கு பின்னர் உலகில் இடம் பெற்ற கடுமையான நிலா சீற்றம் இதுவாகும் என புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று முன்தினம் (06.02.2023) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி மற்றும் ரஷ்யாவில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,236 ஆக உயர்வடைந்துள்ளது

கடந்த காலங்களில் 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8,800 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்தனர் அதே போன்று , 2011 ஆம் ஆண்டு ஜப்பான் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20,000 பேரும் உயிரிழந்துள்ளனர் . இயற்க்கை சீற்றத்திற்கு யாரும் விதிவிலக்கு அல்ல

Previous articleயாழில் சட்டத்தரணியால் நடுத்தெருவில் வந்த இளம் மருத்துவரின் வாழ்க்கை!
Next articleயாழில் இன்று பேருந்து நிலையத்தின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ! வெளியான காரணம் !