யாழ் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

இச் சம்பவமானது நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது பட்டா வாகனத்தில் வந்த சிலர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பின்பக்க நுழைவாயில் ஊடாக ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

இதனை அவதானித்த காவலாளி அவர்களை தடுக்க முயன்ற போது பட்டா வாகனத்தில் இருந்த வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயன்றுள்ளனர் ஒருவாறு சுதாகரித்து கொண்ட காவலாளி அவர்களை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்ட வேளை அங்கிருந்த மேசை கதிரை போன்றவற்றை வன்முறைகும்பல் வாளால் வெட்டியுள்ளனர்.

தற்போது சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



Previous articleஆடை விற்பனை நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்
Next articleபணம் அச்சடிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர்