தென்னிலங்கையில் முதலைகள் வாழும் ஆற்றில் திடீரென குதித்த பெண் !

அம்பலாந்தோட்டை வளவில் கூண்டு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மூவரால் மீட்கப்பட்டுள்ளார்.

முதலைகள் வாழும் வளவே ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் சுமார் இருநூறு மீற்றர் வரை ஆற்றின் மேற்பரப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்கு கூடியிருந்த மக்கள் தெரிவித்தனர்.

எனினும், குறித்த பெண் ஆற்றில் குதிப்பதைக் கண்ட நபர் ஒருவர் அருகில் இருந்தவர் உதவியுடன் அவரை மீட்டு படகில் ஏற்றிச் சென்றுள்ளார்.

ஆற்றில் குதித்து உயிர் தப்பிய சிறுமி அம்பலாந்தோட்டை பூர்புலய பகுதியை சேர்ந்தவர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெண் ஆற்றில் குதித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மீட்கப்பட்ட பெண் அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleகனடாவில் வசிப்போருக்கு வெளியன மகிழ்ச்சி செய்தி !
Next articleசீனாவில் குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் குகைவாசம் இருந்த நபர் !