யாழ் கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை பகுதியில் அநாதரவாக மீட்பு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் கடத்தப்பட்ட  ஹயஸ் ரக வாகனம் இன்றைய தினம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவான நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தையே பார்வையிட வந்த வந்த நபர்கள் ஒட்டி பார்ப்பதாக கூறி கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாகன உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது இந் நிலையில் வாகனத்தின் இலக்க தகடுகள் ஏதும் அற்ற நிலையில்  மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் மீட்க்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வாகனத்தை கடத்தி சென்றவர்கள் ஏதேனும் கடத்தலில் ஈடுபட்டார்களா என பொலிசார் சந்தேகிக்கின்றனர் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleயாழில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழப்பு!
Next articleபேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் வாய்ப்பு!