யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பாதுகாப்புடன் வெளியே வந்த குற்றவாளி!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவீஸ் குமார் இன்றைய தினம் (20-03-2023) நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்து வந்திருந்துள்ளனர்.

இதேவேளை, மரணதண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்றைய தினம் பிரிதிவாதிகளின் மனு மீதான விசாரணை இடம்பெற்றிருந்தது.இவ்வாறான நிலையில், பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடுகள் கோரப்பட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியான ‘சுவீஸ் குமார்’ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற பாடசாலை சிறுமி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, யாழ் மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்நிலையில் இடம்பெற்றிருந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய பிரதிவாதிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleமக்கள் ஆதரவுடன் மகிந்தவை பிரதமராக்குவோம்!
Next articleயாழிற்கு வருகை தந்த இந்தியாவின் பிரபல நடன இயக்குநர்!