அவுஸ்ரேலியாவில் இலங்கையர்கள் நிகழ்த்திய சாதனை

இலங்கையின் பிரபல கலைஞரும், திறமையான சமையல்காரருமான டான் ஷெர்மன் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சமையல் போட்டியில் வெற்றிப்பெற்று விருது வென்றுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் டான் ஷெர்மன் அவுஸ்திரேலியாவின் மிகவும் திறமையான சமையல்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய சமையல்காரர்கள் கூட்டமைப்பு நாட்டில் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய போட்டியில் இவர் முதல் இடத்தைப் பிடித்து விருது வென்றுள்ளார்.

இத்தாலியில் சமையல் ஆய்வுச்சுற்றுலா சென்று திரும்பும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, அந்த போட்டியில் கலந்துக்கொண்ட மற்றுமொரு இலங்கையரும் இரண்டாம் இடத்தை பெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.  

Previous articleபால்மா விலை குறைப்பு!
Next articleயாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட பத்து பேர் கைது!