பல சர்ச்சைக்கு மத்தியில் திரைப்படமாகும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முத்தையா முரளிதரனின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17-04-2023) காலை 8 மணிக்கு முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த மாதுர் மிட்டல், இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்கிறார்.

எம்.எஸ்.சிறிபதி இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, மகிமா நம்பியார் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமுல்லைத்தீவில் பாம்பு கடிக்கு இலக்காகி 5 பிள்ளைகளின் தந்தை பலி !
Next articleமீன்கள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!