பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

யாழில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.

இவர் தனது வெற்றி தொடர்பில் தெரிவிக்கையில்,

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Next articleபேஸ்புக் ஊடாக சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்தவருக்கு நேர்ந்த கதி!