அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 288.06 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 291.96 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதன்படி விற்பனை விலை 305.11 ரூபாவிலிருந்து ரூபாவாக 309.23 அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று 288.02 ரூபாவாக பதிவாகி இருந்ததுடன் இன்று 294.94 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை விற்பனை விலையானது 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் முறையே 295 ரூபா மற்றும் 310 ரூபாவாக அதிகரித்துள்ளது.