ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பட்ட அவசர செய்தி!

ஆளும்தரப்பு அமைச்சர்களை நாளை திங்கட்கிழமை (26-06-2023) முதல் கொழும்பில் தங்குமாறு குறித்த கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாட்ஸ்அப் செய்தி மூலம் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும், அதற்கான காரணம் தொடர்பில் அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த பிரேரணையை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டியுள்ளதாக கருதி, எதிர்வரும் சனிக்கிழமை (01) நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆளும் கட்சியின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நாளை நாடு திரும்பியதையடுத்து, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.