வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

பணம் செலுத்த வேண்டாம்

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் எனவும் பணியகம் பொதுகமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. 

இந்த நிலையில், இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளையதினம்(26) இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.