கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்!

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவாதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை நாட்டிற்கு திரும்பிய வேளையிலேயே விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போலந்து நாட்டில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பலரிடம் 130 இலட்சம் ரூபாய் நிதி மோசடி செய்துள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள பெண் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார் 53 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

44 வயதுடைய பத்தரமுல்லையை சேர்ந்த குறித்த பெண் நடாத்திச்சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமும் கடந்த மாதம் முற்றுகையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக அவருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல கடுவளை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.