உலகில் மிகவும் ஆபத்தான பறவையை பார்வையிட இலங்கை மக்களுக்கு அனுமதி

‘உலகின் மிகவும் ஆபத்தான பறவை’ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு காசோவரி பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த பறவைகள் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் (05.07.2023) கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கை மக்களுக்கு வாய்ப்பு

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த காசோவரி (Cassowary) பறவைகளை இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலை தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடிய பறவைக் கூட்டத்தில், 9 மாதமான ஆண் கெசோவரி பறவையொன்றும், இரண்டு பெண் காசோவரி பறவைகளும் உள்ளதாக தெஹிவளை மிருக காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் தினுசிக்கா மானவடு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பறவைகள் தற்போது, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.