நாட்டின் பால் உற்பத்தியை மேம்படுத்த இணக்கம் தெரிவித்துள்ள பிரான்ஸ்

நாட்டின் பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு பிரான்ஸ் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரான்ஸ் முகவர் நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரித்தல், பாலின் தரத்தை அதிகரித்தல் மற்றும் கறவை பசுக்களை பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.