வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இதன் விதிமுறைகளின் ஒப்புதலுக்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கார்கள் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் பேணும் அதேவேளை,  இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள ஏனைய பொருட்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.