வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு!

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்ந்த விபத்து

பாரவூர்தி ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் பலியானதாக பொலிஸார் தெரிவிதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleமது அருந்தி விட்டு பாடசாலை சென்ற மாணவி!
Next articleவெங்காயத்தின் விலை அதிகரிப்பு!