நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்!

செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடன் சில பிரதேசங்களில் நுளம்பு அடர்த்தி அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடு முழுவதும் இதுவரை சுமார் 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இம்மாதம் 12 ஆம் திகதிக்குள் மாத்திரம் அதன் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. தினசரி பதிவாகும் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் கணிசமாகக் குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்ட நோயாளிகளில் பதிவாகிவந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 100ஆக இது குறைந்துள்ளது. இது ஒரு நல்ல நிலைமை. எனினும் மழையினால் சில மாகாணங்களில் குறிப்பாக மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் டெங்கு நோய் பரவும் அபாயம் மீண்டும் உருவாகியுள்ளது என்றார்.